தருமபுரி, ஜூலை 17 | ஆடி 01 -
தமிழ்நாடு அரசு சார்பில் படித்தும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது:
2025-ம் ஆண்டிற்கான (30.09.2025 முடிவடையும் காலாண்டிற்கான) உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.08.2025
முதன்முறையாக விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் தேவையான சான்றுகளுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களில் 3 ஆண்டுகள் முடிவடையாத நிலையில் சுய உறுதிமொழி ஆவணத்தை அளிக்காதவர்கள், அதனை 29.08.2025க்குள் வழங்கி தொடர்ந்து உதவித்தொகையைப் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.