ஏரியூர், ஜூலை 18 | ஆடி 2 -
தருமபுரி செந்தில்குமார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தெய்வத்திரு குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் உள்ள ஏழ்மை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஏரியூர் மூலபெல்லூர் பகுதியில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில், பெண்களுக்கு புது துணிகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தருமபுரி, மைசூர் மற்றும் டும்கூர் பகுதிகளில் இயங்கும் செந்தில்குமார் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிப்பார்மெண்ட் ஸ்டோர்ஸின் பிரதிநிதிகள் கோபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புடவைகளை வழங்கினர்.
மேலும், எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் செந்தில் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு ஏரியூர் வைகை தொண்டு நிறுவனத் தலைவர் குமரேசன் அவர்கள் தலைமை வகித்து, சிறப்பாக ஒருங்கிணைத்தார்.