தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனச்சரக பகுதியில், சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை வனச்சரக காவலாளர்கள் கண்டறிந்தனர். உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். விசாரணையில் அவரை குறித்த எவ்வித தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், மை தருமபுரி அமரர் சேவை அமைப்புடன் இணைந்து போலீசார் அடக்கம் செய்ய முடிவெடுத்து மை தருமபுரி அமைப்பினருடன் இனைந்து தருமபுரி பச்சையம்மன் கோவில் மயானத்தில் இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டப்பட்டி சிறப்பு காவல் ஆய்வாளர் அருள்ராஜ், காவலர் கோவிந்தசாமி, சமூக அமைப்பாளர்கள் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், வடிவேல், மை தருமபுரி தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செந்தில், கிருஷ்ணன், சண்முகம், கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை நிறுவனம், இதுவரை 149 அடையாளம் தெரியாத புனித உடல்களை, மதிப்புடன் நல்லடக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.