தருமபுரி, ஜூலை 21 | ஆடி 05 –
இக்கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள், உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து மனுக்களும் உரிய துறை அலுவலர்களிடம் அனுப்பி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
-
சாலை வசதி, குடிநீர், பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,
-
பட்டா, சிட்டா பெயர் மாற்றம், வாரிசுச் சான்றிதழ்,
-
புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா,
-
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் ஆகியவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் அவர்கள், இந்த மனுக்கள் அனைத்தும் விரைந்து நடவடிக்கைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், துறை அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, கலால் உதவி ஆணையர் திருமதி நர்மதா, தனித்துணை ஆட்சியர் திரு சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு செம்மலை, ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.