Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ரூ.184.41 கோடியில் 2,387 மேம்பாட்டு பணிகள் – 3.26 லட்சம் நபர்களுக்கு பயன் : மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூலை 21 | ஆடி 05 –

தருமபுரி மாவட்டத்தில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.184.41 கோடி மதிப்பீட்டில் 2,387 மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு, 3,26,704 நபர்களுக்கு பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இது குறித்து அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புற சமூகங்களில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள், சேவைகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களின் மூலமாக நகர்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தருமபுரி மாவட்டத்தில்:

  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.2.03 கோடியில் ஓடை, கண்மாய் தூர்வாருதல், ரூ.13.41 கோடியில் சாலை மேம்பாடு, ரூ.29.26 கோடியில் பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 71,589 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

  • மூலதன மானிய நிதி திட்டத்தில், ரூ.93 லட்சத்தில் சாலைப்பணி, ரூ.6.10 கோடியில் மின்மயானம், சமுதாயக் கூடம், அலுவலக கட்டடம் போன்ற பணிகள் மூலம் 2,830 நபர்கள் பயனடைந்தனர்.

  • நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், ரூ.9.20 கோடியில் 21.763 கி.மீ. சாலைப்பணி மூலம் 39,425 நபர்கள்,

  • இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி திட்டத்தில், ரூ.4.54 கோடியில் குடிநீர் வழங்கல், பேருந்து நிலையம் போன்ற 8 பணிகள் மூலம் 6,120 நபர்கள்,

  • தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், ரூ.9.40 கோடியில் 12.856 கி.மீ. சாலைப்பணிகள் மூலம் 32,850 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

  • தூய்மை பாரத இயக்கத்தின்கீழ், ரூ.1.12 கோடியில் 1,204 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு 6,020 நபர்கள் பயன்பெற்றனர்.

  • நபார்டு திட்டத்தில், ரூ.15.27 கோடியில் 19.409 கி.மீ. சாலைப்பணிகள் மூலம் 22,360 நபர்கள் பயனடைந்தனர்.

  • 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், ரூ.1.60 கோடியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப்பணி மூலம் 8,245 நபர்கள், ரூ.16.89 கோடியில் குடிநீர் திட்டங்கள் மற்றும் பொதுசுகாதார பணிகள் மூலம் 48,620 நபர்கள், ரூ.13.53 கோடியில் சாலை, வடிகால், மயான மேம்பாட்டு பணிகள் மூலம் 35,430 நபர்கள் பயனடைந்தனர்.

  • 6-வது மாநில நிதி திட்டத்தில், ரூ.17.19 கோடியில் பள்ளி கட்டட பணிகள் மூலம் 12,450 நபர்கள்,

  • அம்ரூத் 2.0 திட்டத்தில், ரூ.30.38 கோடியில் நீர்நிலை, பூங்கா மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மூலம் 35,125 நபர்கள்,

  • அயோத்திதாஸ் திட்டத்தில், ரூ.75 லட்சத்தில் சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மூலம் 2,590 நபர்கள்,

  • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், ரூ.12.81 கோடியில் 610 வீடுகள் கட்டப்பட்டு 3,050 நபர்கள் பயனடைந்தனர்.


இதன் மூலம் மொத்தமாக ரூ.184.41 கோடியில் 2,387 பணிகள் செயல்படுத்தப்பட்டு 3,26,704 நபர்கள் பலனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884