அரூர், ஜூலை 21 | ஆடி 05 –
“ஓரணியில் தமிழ்நாடு” மக்கள் இயக்கத்தினை விளக்கும் துண்டறிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மா. சந்தர் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்களான செ. அரவிந்த், R.C. பிரபு, சதா. சுர்ஜீத், எம். சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதி OTNAC ஒருங்கிணைப்பாளர் கு. தமிழழகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ. கோடீஸ்வரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் JCB. க. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் அணி நிர்வாகிகள் வி. கம்பன், முரளி, சர்வேஷ்வரன், வைரவேல் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வின் வாயிலாக மாணவர்களிடையே சமூக நலத்தையும், அரசியல் விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் திமுக மாணவர் அணி செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.