தருமபுரி, ஜூலை 29 | ஆடி 13 :
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவகத்திற்குச் சொந்தமான அரசு வாகனமான TN 29 G 0484 (Bolero LX(D), டீசல்) தற்போது காப்பீடு இல்லாத நிலையில் உள்ளதால், அதனை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம், வரும் 07.08.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவகத்தில், இனை இயக்குநர் / திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், ஏலத் தொகையை செலுத்திய பிறகு, வாகனத்தைக் காணலாம். மேலும், ஏல விதிமுறைகள் மற்றும் பிற விவரங்களை அறிய, சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.