தருமபுரி, ஜூலை 10 (ஆனி 25) -
தருமபுரி மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட V.ஜெட்டிஅள்ளி பகுதியில் வாக்குசாவடி எண் 99-ஐ மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தச் சேர்க்கை முகாமில் தருமபுரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் D.L. காவேரி நேரில் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
நிகழ்வை நேரில் பார்வையிட தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையின் வளர்ச்சியை ஆய்வு செய்தார். மேலும், திமுகவின் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் கெளதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், ஒன்றிய துணைச் செயலாளர் SKM. சதீஷ்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் LRV. சதீஷ்குமார், முன்னாள் மாணவர் அணி S. அண்ணாதுரை, சிறுபான்மையினர் அணி முகமது, DLK. கார்த்தி உள்ளிட்ட கழக கிளை நிர்வாகிகள், BLA2, BDA பிரிவு உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.
உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடரும் நிலையில், திமுகவின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் பொதுசேவையை மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.