பாப்பாரப்பட்டி அருகே | ஜூலை 15, 2025
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள நாகனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சமூகத்தை உள்ளடக்கிய வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. நாஞ்சிலார் அவர்கள் செய்திருந்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. முத்து அவர்கள் கலந்து கொண்டு, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எழுதுப்பொருட்கள், ஏடுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தார். பின்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும் கல்விக்காக அவருடைய தொண்டையும் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் பெண்ணாகரம் வட்டார கல்வி அலுவலர் திருமதி. சுமதி, ஆசிரியர் பயிற்றுனர் திரு. முனுசாமி ஆகியோரும் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் காமராஜரின் தொண்டியல் வாழ்க்கையைப் பற்றி மாணவர்களுக்கு உற்சாகமாகப் பேசினர். காமராஜரின் நினைவாக பள்ளி வளாகத்தில் வேம்பு மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. மரக்கன்றுகளை திரு. முத்து, திருமதி. சுமதி மற்றும் திரு. முனுசாமி ஆகியோர் நடவு செய்தனர்.
இந்த விழாவில் SMC தலைவி திருமதி. கோகிலா, துணைத் தலைவி லட்சுமி, பலர் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழா முடிவில் உதவி ஆசிரியர் திரு. செல்வராசு நன்றி கூறி விழாவை முடித்தார்.