அரூர், ஜூலை 12 (ஆடி 1) -
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கை, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களின் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் தலைமையில் கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் K.ரவிச்சந்திரன் தலைமையிலும், முன்னாள் செயலாளர் M.முகிலன் முன்னிலையிலும் நடைபெற்றது.
தீர்மானங்கள்:
-
ஆடி 18 அன்று, கீரைப்பட்டியில் மாவீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி.
-
புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: M.முகிலன், K.முருகன், திரு.கௌதம், திரு.கார்த்திக்.
-
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பூத் கமிட்டி அமைத்து உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.
-
மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடத்த வேண்டும்.