தருமபுரி, ஜூலை 24 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களுக்கு "முன் மாதிரியான சேவை விருது" பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில், குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்காக சிறப்பாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மொத்தமாக ரூ.4 லட்சம் மதிப்பில் வழங்கப்படும் இவ்விருது, நான்கு பிரிவுகளின் கீழ் தலா ரூ.1 லட்சமாக வழங்கப்படும்.
பிரிவுகள்:
-
அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள்
-
தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கும் இல்லங்கள்
-
சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள்
-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள்
இந்த விருதுகளுக்கான தகுதிகள், வழிமுறைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இணைத்து, உரிய கருத்துருவினை 08.08.2025 மாலை 5.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி - 636705 மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.