Type Here to Get Search Results !

அரக்கோணம் – சேலம் – அரக்கோணம் மெமோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!


பொம்மிடி, ஜூலை 24 | ஆடி 08 -


பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் – சேலம் – அரக்கோணம் மெமோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நாளை (25.07.2025) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு பொம்மிடி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நல சங்கம் தொடர்ந்து பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த கால இடைவெளியில் ரயில் சேவை மீளத் தொடங்குவதை உறுதி செய்த இந்த முயற்சி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ரயிலின் மூலம் பொம்மிடி, மோரப்பூர், சேலம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கிடையிலான பயண வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிகமான பயணிகள் பயன் பெறும் வகையில் இந்த சேவையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


“இது பொதுமக்களின் வெற்றி!” எனத் தெரிவித்து, இந்த முயற்சியில் பங்கேற்ற பொம்மிடி பயணிகள் நல சங்க நிர்வாகிகள், மக்களின் பயண நலனுக்காக தங்களது சேவை தொடர்ந்து இருக்கும் என்றும் உறுதியளித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies