பாலக்கோடு, ஜூலை 15 (ஆடி 31) -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய்சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் குமார், ஒன்றியச் செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தின் போது, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியின் தோழர்கள் கிராமம்தொறும் மக்களிடம் சென்று தே.மு.தி.க. கொள்கைகள் மற்றும் இலக்குகளை விளக்கி பேசும் பணிகள், வாக்குசாவடி முகவர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு, ஊர்வலம் மற்றும் பேரணி ஏற்பாடு, மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், தேர்தல் வெற்றிக்கான முழுமையான கள வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டன. கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திருப்பதி, மாவட்ட பொருளாளர் ராமசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், ஒன்றியச் செயலாளர்கள் ஞானவேல், செல்வம், முருகன், நகரச் செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முக்கிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.