தருமபுரி, ஜூலை 21 | ஆடி 05 -
தருமபுரியில் இயங்கி வந்த சிறப்பு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்றம் (எம்.சி.ஓ.பி வழக்குகள்), தற்போது தருமபுரி தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஹெரிடேஜ் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ROC No.56-A/2015/D2, நாள்:17.07.2025 என்ற அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்கள் வரும் 24.07.2025 (வியாழக்கிழமை) முதல் புதிய இடத்தில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், அவர்களது வழக்குகள் மற்றும் விசாரணைகளுக்கு ஏற்ப தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இது குறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. திருமகள் அவர்கள் அறிவித்துள்ளார்.