பாலக்கோடு, ஜூலை 24 | ஆடி 08 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாம் பாலக்கோடு தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து, BDA மற்றும் BLA2 நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்.
இப்போது நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை பணியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி வீடு, வீடாக சென்று கழக அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி, 40% உறுப்பினர் சேர்க்கை இலக்கை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், பார்வையாளர் பரணி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் நாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் அழகுசிங்கம், நிர்வாகிகள் இருசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.