தருமபுரி மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இதுவரை 74,602 மாணவ, மாணவியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி ஏற்கும் நாளிலிருந்து, பல்வேறு வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமானது “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்குப் பின் வேலைவாய்ப்பு பெரும் திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில்:
மொத்தம் 49 கல்வி நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் தனித்திறன் பயிற்சி போன்ற பயிற்சிகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 2,356 இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்ட இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் முனைவுத் துறைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.