பாப்பாரப்பட்டி, ஜூலை 23 | ஆடி 07 -
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிட மண்டபத்தில், அவரது 100வது நினைவு தினம் இன்று (ஜூலை 23) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சதீஷ், IAS, கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்திற்கும், திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விடுதலைக்காக தன்னுயிர் நீர்க்கும் தியாகத்தை செய்த சுப்பிரமணிய சிவாவின் நினைவாக, இவ்விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, வட்டாட்சியர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு, இந்திய விடுதலை வரலாற்றில் சிறப்பான இடம் பெற்ற சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தை மீண்டும் நினைவு கூரச் செய்ததோடு, இளைஞர்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.