Type Here to Get Search Results !

இலக்கியம்பட்டி TAMS Colony அருகே குப்பை கொட்டும் பிரச்சனை; நிரந்தர தீர்வு கோரும் குடியிருப்பு வாசிகள்.


தருமபுரி, ஜூன் 10:

இலக்கியம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி பின்புறம் வழியாக உள்ள TAMS Colony அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடம், பல வருடங்களாக குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.


குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து வரும் துர்நாற்றம் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை அந்த பகுதியில் குப்பைகள் ஒருமுறையும் அகற்றப்படவில்லை என்றும், அவ்வப்போது மட்டும் நெருப்பு வைத்து குப்பை எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், தருமபுரி BDO அவர்கள் நேரில் வந்து, இந்த நிலையை பார்வையிட்டு, நிரந்தரமான குப்பை அகற்றும் ஏற்பாடுகளை செய்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்க வேண்டும் என TAMS Colony குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies