Type Here to Get Search Results !

புதிய தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர் பணியின்போது உயிரிழப்பு- இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சுங்கசாவடி அலுவலகத்தை முற்றுகை.


பாலக்கோடு‌, ஜூன் 11-

தர்மபுரி முதல் பெங்களூரு வரை புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் செடிகளுக்கு நீர் ஊற்றுதல், சாலையை சுத்தம் செய்தல், பொதுகழிவறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கு மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் புலிக்கரை கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (46) என்பவர் நேற்று முன்தினம் கர்த்தாரப்பட்டி சுங்கசாவடியில் உள்ள பொதுக்கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இதையடுத்து சுங்க சாவடி மற்றும் புதிய தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் மணிவண்ணின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இவரது குடும்பத்தினர் மர்மமான முறையில் உயிரிழந்த மணிவண்ணனின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இவரைபோன்று நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் பணியின் போது விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு இழப்பீடும் தருவதில்லை என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு பெற்று தருவதாக கூறி சமரசம் ஏற்படுத்தியை தொடர்ந்து போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies