Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மாணவிகளை குறிவைத்து இளைஞர்கள் அட்ராசிட்டி – பொதுமக்கள் புகார்.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 08-

பாலக்கோடு பேருந்து நிலையத்தில், சில இளைஞர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தினசரி காலையிலும், மாலையிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்ற நேரத்தில், இளைஞர்கள் சிலர் அவர்களை நோக்கி விசில் அடித்தல், கேலி பேசுதல், சைகைகள் காட்டுதல் போன்ற அட்ராசிட்டி செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


சிலர் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிவந்து, மாணவிகளை கவரும் வகையில் சாகசம் செய்வதும், அருகில் நின்று சிரித்தல், படம் எடுக்க முயற்சிப்பதும் பேருந்து நிலையத்தை பரபரப்பாக மாற்றியுள்ளது. இது போன்ற செயல்பாட்டுகளால், மாணவிகள் தவிக்கின்றனர். இவர்களது செயல்கள் மற்ற பயணிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


மாணவிகள் தனியாக பயணம் செய்யும் நேரங்களில் இந்த இளைஞர்களின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும், சில சமயங்களில் இவர்கள் மாணவிகளை பின்தொடர்வதும், பயப்பட வைக்கும் சூழ்நிலையையும் உருவாக்குவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையத்தில் போலீசார் நிலையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றன.


இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து, மாலை நேரங்களில் போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies