Type Here to Get Search Results !

அரூரில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம்.


அரூர், ஆடவை (ஆனி) 08-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை முன்னிட்டு, "மண், மொழி, மானம் காத்திட ஒரே அணியில் தமிழ்நாடு" என்ற கருப்பொருளின் அடிப்படையில், அரூர் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ K. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அரூர் செயலாளர் முல்லை ரவி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன், உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி, “வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்த்தலுடன், அரசுத் திட்டங்களின் பயன்கள் மற்றும் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்க அனைத்து உறுப்பினரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் சட்டமன்ற பார்வையாளர் சி. செல்லதுரை, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டம், கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சியாகவும், வருங்கால தேர்தலுக்கான நிலை தயாரிப்பாகவும் காணப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies