Type Here to Get Search Results !

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


பென்னாகரம், ஆடவை (ஆனி) 08 -

உலக யோகா தினத்தை முன்னிட்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளியின் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்வின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.


பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் பைரேட்ஸ் பாஷா தலைமையில், மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகா முறைகள் பயிற்சியளிக்கப்பட்டன.


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். இந்த நிகழ்வின் மூலம், மாணவர்கள் மன உறுதி, உடல் நலம் மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies