Type Here to Get Search Results !

ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


தருமபுரி, ஜூன் 06-


சர்வதேச சுற்றுசூழல் தினத்தையொட்டி, தருமபுரி DNV நகர் மற்றும் நந்தி நகர் பகுதிகளில் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வு கல்லூரி தாளாளர் திரு. சிலம்பரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் திரு. துரை, மாணவர்கள், மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, சுற்றுசூழல் தின உறுதிமொழியையும் எடுத்தனர்.


சுற்றுசூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், இளம் தலைமுறையினரிடையே பசுமை மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரங்களை நடுவது மட்டுமல்லாமல், அவற்றை பராமரிப்பதன் முக்கியத்துவம், காலநிலை மாற்றம், காற்று மற்றும் நீர் மாசுபாடு, புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க மரக்கன்றுகள் மிகவும் அவசியம் என்பதையும் மாணவர்களுக்கு விளக்கினர்.


சுற்றுசூழலை பாதுகாப்பதும், பசுமையை பராமரிப்பதும் ஒவ்வொருவரின் பொறுப்பே என்ற எண்ணத்துடன் மாணவர்கள் உறுதியுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும், சுற்றுசூழலுக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies