Type Here to Get Search Results !

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, ஆடவை (ஆனி) 12-

தமிழ்நாடு நாள் (ஜூலை 18) விழாவை முன்னிட்டு, தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி (செய்திக்குறிப்பு எண் 988, நாள்: 30.10.2021), தாய்த் தமிழ்நாட்டிற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் சூட்டிய "தமிழ்நாடு" என்ற பெயர் வழங்கப்பட்ட தினமான ஜூலை 18-ஆம் நாளே தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள், 04.07.2025 (ஆனி 20, சுபகிருது ஆண்டு) அன்று காலை 9.30 மணி முதல், தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.


கட்டுரை தலைப்புகள்:

  1. ஆட்சிமொழி வரலாற்றில் கி. இராமலிங்கம்

  2. பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையின் தமிழ் ஆட்சிச்சொல் பணி


பேச்சுப் போட்டி தலைப்புகள்:

  1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

  2. அன்னைத் தமிழே ஆட்சிமொழி

  3. தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர்

  4. அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு

  5. ஆட்சிமொழி விளக்கம்

  6. தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு

  7. ஆட்சிமொழி – சங்க காலம் தொடங்கி

  8. இக்காலத்தில் ஆட்சிமொழி


மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசாக:

  • முதல் பரிசு – ₹10,000

  • இரண்டாம் பரிசு – ₹7,000

  • மூன்றாம் பரிசு – ₹5,000
    மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


இதற்கான ஏற்பாடுகளை தமிழ்வளர்ச்சித் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies