Type Here to Get Search Results !

முக்குளம் சோமலிங்க ஐயர் ஏரியில் 20,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டது: மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்


காரிமங்கலம், ஆடவை (ஆனி) 12-

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள முக்குளம் ஊராட்சி சோமலிங்க ஐயர் ஏரியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மீன்குஞ்சுகள் இருப்பு திட்டத்தின் கீழ் 20,000 மீன்குஞ்சுகள் இன்று (26 ஜூன் 2025 – ஆனி 12) மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி ஆகியோர் தலைமையில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது.


மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, 2025–26 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திற்கு 200 எக்டேர் நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2024–25 இல் 150 எக்டேர் பரப்பளவில் மீன்குஞ்சுகள் விட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டம், கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊர்மக்களுக்கு சத்தான மீனுணவு கிடைக்கவும் வழிவகுக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. நிகழ்வில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு. பி.சி.ஆர். மனோகரன், மீன்துறை உதவி இயக்குநர் திரு. விஜயராகவன், வட்டாட்சியர் திரு. மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies