Type Here to Get Search Results !

தருமபுரியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் – திட்ட இயக்குநர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 17:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட (ICDS) பணிகளின் கீழ் பணிபுரியும் மாவட்ட திட்ட அலுவலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.


இந்த கூட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குநரும் கண்காணிப்பு அலுவலருமான திருமதி ஐ.சா. மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்களின் தலைமையிலும், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.


இக்கூட்டத்தின் போது, திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 0 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் திட்டத்தின் நன்மைகளை முழுமையாக பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இது, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.


அத்துடன், கூட்டத்திற்கு முன் இயக்குநர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அடிலம் குழந்தைகள் மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நபார்டு நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத் திட்ட பணிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கேத்தரின் சரண்யா, இ.ஆ.ப., தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ரா. காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலர் (ICDS), காரிமங்கலம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies