Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பழங்குடியினர் சிறப்பு முகாம் – 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 10-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் "தொல்குடி திட்ட" சிறப்பு முகாம் நடைபெற்றது. திட்ட அலுவலர் திரு. அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், தாசில்தார் திருமதி. ரஜினி, தனித் தாசில்தார் திரு. ஆறுமுகம், துணை தாசில்தார்கள் எழில் மொழி, உமாபதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.


பாலக்கோடு தாலுக்காவிற்குள் உள்ள பழங்குடியின மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வீட்டுமனை பட்டா, இலவச வீடு, பிறப்பு/இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட தேவைகளுக்காக தங்கள் மனுக்களை சமர்ப்பித்தனர். மொத்தம் 120 பேர் இந்த முகாமில் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்ட 60 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இம்முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் காளிஸ்வரன், கோகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினரும் கலந்து கொண்டு பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த முகாம் பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்று, பலரும் நன்றி தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies