Type Here to Get Search Results !

தருமபுரியில் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்.


தருமபுரி, ஜூன் 11:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் முக்கியமான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை வளர்ச்சி குறித்து பரிசீலிக்கப்பட்டது.

தொழில் முனைவோர் நடத்தும் 10 மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் 11 மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 21 முதல்வர் மருந்தகங்களும் பொதுமக்களுக்கு சந்தை விலையைவிட 75% குறைந்த விலையில் மருந்துகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யூனானி, சர்ஜிக்கல் பொருட்கள் உள்ளிட்ட மருந்துகளை வழங்கி வருகின்றன.


மருந்தகங்களில் விற்பனையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, விற்பனையில் சிறந்து விளங்கிய மருந்தாளுநர்கள் - தருமபுரி செல்வி நர்மதா தங்கராஜ், திருமதி இந்துஜா பழனி, திருமதி பாக்கியலட்சுமி, ஏரியூர் திருமதி ஜெயந்தி, பாலக்கோடு திரு வாசுதேவன் ஆகியோர் கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் திரு. கு.த. சரவணன், அலுவலக கண்காணிப்பாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies