Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு.


பாலக்கோடு‌, ஜூன் 12- 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான  கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.                  


இக்கல்லூரியில் சுழற்சி –I ல் இளங்கலை, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பொது நிர்வாகம், இளமறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல், உளவியல், நுண்ணுயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மிண்ணனு மற்றும் தொடர்பியல், இளவணிகவியல், இளவணிகநிர்வாகவியல், இளநிலை சமூகப்பணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், சுழற்சி–II ல் புதியதாக தொடங்கப்படடுள்ள இளங்கலை, வரலாறு, இளமறிவியல் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், இளவணிகவியல், இளவணிகநிர்வாகவியல் மற்றும் இளநிலை கணினிபயன்பாடு ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு  நடைபெற்று வருகின்றது. 

எனவே, மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இக்கல்லூரியில் சேர்க்கை பெறுமாறும், ஏற்கெனவே, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு தற்போது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும் இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை உதவி மையம் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கல்லூரி முதல்வர்  தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies