Type Here to Get Search Results !

அலமேலுபுரத்தில் அரசு பாதை ஆக்கிரமிப்பு – தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 13-

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட அலமேலுபுரம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் முக்கியமான பாதை அரசு ஆவணங்களில் "நிலவியல் பாதை" (Survey Pathway) என பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது அந்தப் பாதையில் பலரும் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் வேலிகள் அமைத்துள்ளனர்.


இந்த பாதை சுமார் 25 அடி அகலமும், 1 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. பல வருடங்களாக, பொதுமக்கள் இந்த பாதையைப் பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கும், அருகிலுள்ள கிராமங்களுக்கும் சென்று வருவதில் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் நிலம் சிளுந்தி, நான்கு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடுகிறது.


பலமுறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் இதனைச் சமரசமாக விட்டுவிட்டுள்ளனர். மருத்துவ அவசரங்கள், கல்வி, விவசாய நடவடிக்கைகள் போன்ற அனைத்துக்கும் இப்பாதையின் இல்லாமை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட நிலவியல் பாதையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அலமேலுபுரம் கிராம பொதுமக்கள் சார்பில் உறுதியான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies