தருமபுரி, ஜூன் 9-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த மொத்தம் 456 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள், உதவித்தொகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், பட்டா மாற்றம், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமாகப் பதிவாகின.
மனுக்களை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்களிடம் அவற்றை வழங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய தீர்வுகளை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாக பூர்த்தி செய்ய மாநில அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.14.58 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை அவயங்கள் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
.gif)

