தருமபுரி, ஜூன் 09-
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடாக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்காக திரு. விக்னேஷ் குமார் அவர்கள் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கழக வளர்ச்சியில் செயலில் இருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் கிளை நிர்வாகி, பின்னர் இளைஞரணி ஒன்றிய செயலாளர், துணைச் செயலாளர் பதவிகளை வகித்ததுடன், தற்போது ஒன்றிய கழக செயலாளராக கடமையாற்றி வருகிறார்.
இந்நியமனத்துக்காக, தர்மபுரி கிழக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, வார்டு, கிளை கழகங்கள் மற்றும் தங்களுடைய சார்பு அணிகள் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரு. விக்னேஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
.gif)

