Type Here to Get Search Results !

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மீது தாக்குதல் – பென்னாகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.


பென்னாகரம், ஆடவை (ஆனி) 10- 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, கிளை நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு கண்டன உரைகள் நிகழ்த்தினர். தாக்குதலுக்கு நீதிகேட்டு வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், ஜனநாயக உரிமைகளை மீறும் தாக்குதல்களை அரசாங்கம் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies