Type Here to Get Search Results !

தருமபுரியில் ஜூன் 9ம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்.


தருமபுரி, ஜூன் 06-

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) ஜூன் 9, 2025 அன்று கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.


இம்முகாமில் அரசு மற்றும் பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ், ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமா மற்றும் பட்டம் (BE, BA, BSc, B.Com போன்றவை) போன்ற கல்வித் தகுதி பெற்ற நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வானோர் தொழிற்பழகுநர் பயிற்சி மூலம் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் வயது வரம்பில் சலுகை பெறலாம்.


இந்த பயிற்சிக்காக மாதம் ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை நிறுவனத்தால் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பட்டதாரிகள் NSDC/SSC வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழையும் பெற முடியும். தகுதி உள்ள நபர்கள் அனைவரும் அவர்களுடைய அசல் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலதிக தகவலுக்காக மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகவோ அல்லது 94422–86874, 94999–37454, 70108–65277 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies