Type Here to Get Search Results !

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 06-

தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வழிகாட்டுதலின் பேரில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் ஜூன் 9 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.


இந்நிலையில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்ட ஆதரவற்ற மகளிரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன், கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அந்த வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.


இதற்காக, www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதள பயன்பாட்டில் பதிவு செய்வதற்கான முகாம்கள் ஜூன் 9ம் தேதி தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாரங்களில், ஜூன் 11ம் தேதி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு, ஜூன் 13ம் தேதி மொரப்பூர் மற்றும் கடத்தூர், ஜூன் 16ம் தேதி பென்னாகரம் மற்றும் ஏரியூர், ஜூன் 18ம் தேதி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ளன.


முகாமில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவை அல்லது கைவிடப்பட்ட சான்று மற்றும் அலைபேசி ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies