Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் பசுமை திட்டத்தின் கீழ் 230 மரக்கன்றுகள் நடவு.


தருமபுரி, ஜூன் 5:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமை தருமபுரி மாவட்டம்" என்ற திட்டத்தின் கீழ், பென்னாகரம் ஸ்ரீதேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் பென்னாகரம் வருவாய் துறை இணைந்து பருவதனஹள்ளி நாய்குட்டை கிராமத்தின் கரட்டு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை சிறப்பாக நடத்தினர்.


இந்த நிகழ்வை பென்னாகரம் மண்டல அலுவலரும் உதவி ஆணையர் (ஆயம்) ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை துணை இயக்குநர், வன அலுவலர்கள், ஸ்ரீதேவி திறன் வளர்ப்பு பயிற்சி மைய மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், MGNREGS களப் பணியாளர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.


இந்நிகழ்வில் இன்று மட்டும் 230-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் பசுமை நோக்கை வலியுறுத்தியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies