தருமபுரி, ஜூன் 9:
திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தர்மாநகர் அருகே உள்ள கெஹரான்கரி கிராமத்தைச் சேர்ந்த டேப்நாத் சௌதிரி (a.k.a ஆதித்ய சௌதிரி) (39) என்பவர், அவரது உறவினரான பாபாய் (a.k.a சங்கர் பசுன்யா) (25) உடன் தருமபுரி தாலுகா மாரவாடி பகுதியில் உள்ள சுதர்சன் கிரானைட் கம்பெனியில் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.
2022 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி, இருவருக்கும் இடையே பணம் தொடர்பான தகராறு ஏற்பட்டது. அந்த வேளையில் தூங்கிக் கொண்டிருந்த பாபாயை, டேப்நாத் சௌதிரி சுத்தியால் தாக்கி நிர்பராதமாக கொலை செய்து பின்னர் பெங்களூருக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரானைட் கம்பெனியின் உரிமையாளர் சுதர்சன் (34) அளித்த புகாரின் பேரில், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் IPC பிரிவு 302 ஆகிய கீழ் குற்ற வழக்கு எண் 57/2022 பதியப்பட்டது. தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் திரு. நவாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, 20.05.2022 அன்று பெங்களூருவில் இருந்து குற்றவாளி கைது செய்யப்பட்டது.
காவல்துறையின் விசாரணை முடிந்து, வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி U. மோனிகா, M.L. அவர்கள், டேப்நாத் சௌதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து, அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் தீர்ப்பை அறிவித்தார்.
.gif)

