தருமபுரி, ஜூன் 9:
“Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in என்ற முகவரியில் காணப்படும் இந்த செயலி, மூத்த குடிமக்கள் தங்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்களையும் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவுகிறது.”
இந்த செயலியில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
-
அருகாமையிலுள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் பற்றிய தகவல்கள்
-
ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்கள்
-
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விவரங்கள்
-
உடற்பயிற்சி, ஆரோக்கியம், மற்றும் மருத்துவ ஆலோசனைகள்
-
பொதுமக்கள் மூத்த குடிமக்கள் குறைகளை நேரடியாக பதிவு செய்யும் வாய்ப்பு
இந்த செயலி, மூத்த குடிமக்களுக்கு வழிகாட்டி செயலியாக செயல்படுவதோடு, அவர்களின் நலனுக்கான எண்ணற்ற பயன்பாடுகளை கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 செயலி முகவரி: Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in
🛒 கிடைக்கும் இடம்: Google Play Store
.gif)

.jpg)