Type Here to Get Search Results !

உலக மழைக்காடுகள் தினத்தை முன்னிட்டு 100 இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா.


பென்னாகரம், ஆடவை (ஆனி) 08-

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறை உதவிப் பேராசிரியர் நா. நாகராஜ் வரவேற்று உரையாற்றினார். சமூக ஆர்வலர் மு. பிரேம்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் இயற்கை துரை முத்துக்குமார், மா. கிருஷணன், கோ. வைரம், இரா. ரகுராமன், அ. குமார், சமூக ஆர்வலர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


விழாவின் சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மா. பழனி (சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்) கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:

"இயற்கையை பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் முக்கிய கடமை. மனிதனுக்கும் மரத்துக்கும் தொன்மையான தொடர்பு உள்ளது. மரங்களை நண்பர்களைப் போல நேசிக்க வேண்டும். பனைமரம் போன்ற மரங்கள் நீர்வளத்தை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கையை பாதுகாப்பதே நம் சந்ததிக்க வழங்கும் சிறந்த சொத்தாகும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, அனைவரும் மரங்களை நட்டும் பராமரிக்க வேண்டும்."


விழா முடிவில், மேச்சேரி காவிரி கல்லூரி தமிழ்த்துறை மாணவி ம. சண்முகப்பிரியா நன்றியுரை வழங்கினார். இந்த விழாவில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஏரியூர் அருகேயுள்ள ஆரல்குந்தி கிராமத்தில், உலக மழைக்காடுகள் தினத்தையொட்டி 100 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. ஊராட்சி தலைவர் செ. தங்கராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். இராதா கிருஷ்ணன், அர்த்தநாரி, முனுசாமி, சென்னியப்பன் உள்ளிட்ட ஊரின் முக்கிய பிரமுகர்கள் விழாவில் முன்னிலை வகித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies