Type Here to Get Search Results !

பாலக்கோடு பாஜக அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்.


பாலக்கோடு ஆடவை (ஆனி) 07–

பாலக்கோடு பாஜக அலுவலகத்தில் 11-வது சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் முனியப்பன், நகர பொது செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், யோகாசனங்களின் பயிற்சியும் வழங்கப்பட்டது.


மூச்சுப் பயிற்சி மற்றும் உடல்நலத்திற்கான யோகாசனங்களை முன்னோடி பயிற்சியாளர்கள் காட்டினர். இதில் நகர செயலாளர் நந்தகிரி, நகர பொறுப்பாளர்கள் அரவிந்த், பச்சையப்பன், சகாதேவன், மணிவண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies