Type Here to Get Search Results !

ஜோதிஅள்ளியில் கிணற்றில் விழுந்த காளை மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 07-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி கவுண்டர் என்பவர், தன்னுடைய நிலத்தில் மேய்ச்சலுக்காக வளர்த்து வைத்திருந்த காளை மாட்டை கட்டி வைத்திருந்தார். மேய்ச்சலுக்காக வெளியே சென்ற காளை, அப்பகுதியில் இருந்த 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.


அந்த நேரத்தில் காளை மாட்டின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தபோது, கிணற்றில் விழுந்த காளை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக தகவலறிந்த அவர்கள், பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை தொடர்புகொண்டனர்.


தகவலின்பேரில் தீயணைப்பு துறையின் உதவி நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த உழைப்புக்குப் பிறகு, அந்த காளை மாடு எந்தவிதமான பெரிய காயமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்டது.


பின்னர் காளையை அதன் உரிமையாளரான விவசாயிக்கு ஒப்படைத்த தீயணைப்பு வீரர்களின் செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரவலான கவனத்தை பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies