Type Here to Get Search Results !

ஜோதிஅள்ளியில் பாரதியார் ரெளத்திரபடை இளைஞர் நற்பணி மன்ற துவக்க விழா.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 11-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளி பஞ்சாயத்து ஜோதிஅள்ளி கிராமத்தில் பாரதியார் ரெளத்திரபடை இளைஞர் நற்பணி மன்றத்தின் துவக்க விழா நடைபெற்றது. இவிழா முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று, மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மன்ற தலைவர் தமிழ், செயலாளர் கீர்த்திவாசன், பொருளாளர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


இந்நற்பணி மன்றத்தின் முக்கிய நோக்கம் சமூக நலத்தையும், இளைஞர்களின் சேவை மனப்பான்மையையும் வளர்ப்பதாகும். இதன் மூலம் இலவச ரத்ததான முகாம்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள், சுற்றுப்புறம் தூய்மைபடுத்தும் நடவடிக்கைகள் போன்றவை நடைபெற உள்ளன. விழாவில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies