தருமபுரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் செயலில் இருக்கும் மை தருமபுரி அமைப்பின் பணியாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாக, அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி திஷா ஸ்ரீனிவாசன் தனது தலைமுடியை தானமாக வழங்கி மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தலைமுடி மிக முக்கியமான மனச்சோர்வின் காரணமாக மாறும் நிலையில், திஷாவின் இத்தகைய செயல் மிகப்பெரிய ஆறுதலாகவும், சமூகத்துக்கு உந்துதலாகவும் அமைந்துள்ளது. மேலும், திஷாவின் தாயார் தீபா ஸ்ரீனிவாசனும் ஒரு நீண்டகால இரத்ததான கொடையாளராக இருப்பது, குடும்பத்தின் சமூகப் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது.
இந்த நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா ஆகியோரும் பங்கேற்றனர். மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
.gif)

