Type Here to Get Search Results !

இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது புகார் – கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு,


தருமபுரி, ஆடவை(ஆனி) 09-

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு. திரிலோகசுந்தர் மீது, பள்ளி மாணவனின் தாயின் கைப்பேசி எண்ணை பெற்றுக்கொள்ள மாணவரை வற்புறுத்தி, அதை ஏற்காததால் மாணவரை மிரட்டி, அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து நக்கீரன் வாரப்பத்திரிகையில் செய்தி வெளியாகி, 20.06.2025 அன்று சம்பந்தப்பட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவியது. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, 27.06.2025 அன்று அறிக்கையை சமர்ப்பிக்க, தருமபுரி வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதுடன், அதன் முடிவில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies