தருமபுரியில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம் – ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

தருமபுரியில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம் – ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு.


தருமபுரி, ஜூன் 17-


முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் (ஈகை திருநாள்) இன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆனந்தமாகவும், அமைதியாகவும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் முக்கிய மசூதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.


தருமபுரி நகரம், பாலக்கோட்டு, பென்னாகரம், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, காரிமங்கலம், கடத்தூர், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், நல்லம்பள்ளி, தொப்பூர், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டன.

தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் காலை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையுடன் பங்கேற்று இறைநம்பிக்கையுடன் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அகிலே சுன்னத் ஐக்கிய ஜமாத் மாநில துணைச் செயலாளர் எக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் ஜப்பார், செயலாளர் டி.கே. பாபு, நகர கூட்டமைப்புத் தலைவர் முனவர் ஜான், பொருளாளர் முஸ்தாக், துணைத் தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தொடர்ந்து, பக்ரீத் பண்டிகையின் ஒரு முக்கியமான அம்சமாக, குர்பானி (பலியீடு) நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏழை எளியவர்களுக்கு ஆட்டு இறைச்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இது தவிர, பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முக்கிய இடங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


இந்த பண்டிகை, தியாகம், பகிர்வு மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றின் பெருமையை வலியுறுத்தும் விழாவாகும். தருமபுரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் தினம் இனம், மதம் கடந்து மக்களிடையே ஒற்றுமையை வளர்த்த பண்டிகையாக இன்று வழிமொழிகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad