Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்.

பாலக்கோடு, ஜூன் 07-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. பாலக்கோடு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்வில், முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.


திண்ணை பிரச்சாரத்தின் போது, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்தது, மின் கட்டண உயர்வு, சொத்து வரி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் படும் தொல்லைகள் குறித்து விளக்கினர். மேலும், தற்போது சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் கூறி, மக்களின் கவனத்தை ஈர்க்க துண்டுச் சீட்டுகள் மற்றும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


அதிமுக அரசு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் பிரச்சாரத்தில் விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் கோபால், வக்கீல் செந்தில், நகரச் செயலாளர் ராஜா, மேலும் மாவட்ட, ஒன்றியம் மற்றும் நகர அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திண்ணை பிரச்சாரம், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies