இடமாற்றம் செய்யப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் மீண்டும் பணியில் சேர வேண்டும் – பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

இடமாற்றம் செய்யப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் மீண்டும் பணியில் சேர வேண்டும் – பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு.


தருமபுரி, மே 22 -

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மரியா ஷில்பா மீது எடுக்கப்பட்ட இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


மனுவில், "எங்கள் குழந்தைகள் அந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மரியா ஷில்பா ஆசிரியர் வகுப்புகளில் சிறந்த திறமையுடன் பங்களித்து வந்தார். சமூக அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்ததோடு, ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்தார். மாணவர்கள் கலையோசை, என்.என்.எஸ்., ஸ்கவுட் உள்ளிட்ட வகுப்புப்பயிற்சிகளில் மாநில அளவிலான வெற்றிகளைப் பெற்றதில் இந்த ஆசிரியரின் பங்களிப்பு முக்கியமானது" என தெரிவித்துள்ளனர்.


மேலும், "சில பள்ளி ஆசிரியர்களின் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவருக்கு பொய்யான புகார்கள் கொடுக்கப்பட்டு, மேலதிக விசாரணை இல்லாமல் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக நாங்கள் அறிந்தோம். இது நல்ல ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையை பாதிக்கும் செயல். அவரின் இடமாற்றத்தால் எங்கள் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்வியில் ஆர்வம் குறைந்து உள்ளது. ஆகையால் மரியா ஷில்பா ஆசிரியரின் இடமாற்ற ஆணையை ரத்து செய்து மீண்டும் அவரை அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதையடுத்து, மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad