இது தொடர்பாக, தருமபுரி நகராட்சி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெறும் தேர்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டார். தேர்வு நடைபெறும் 10 தேர்வு மையங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
-
தேர்வு பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
-
தேர்வர்கள் காலை 11.00 மணி முதல் 01.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
-
தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கூறினார்.
-
மொபைல் போன், புளுடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னனு சாதனமும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது.
-
தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மையத்திற்கே உரிய நேரத்தில் செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், மாணவர்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ இல்லாமல், நேர்மையாகவும் நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வுகளை அழகாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் உறுதியாக செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த நேரடி ஆய்வின்போது, தருமபுரி வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக