
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள சுமார் 14 அரசு பள்ளிகளில் சமையல் உதவியாளர் பணிக்கு பணியமர்த்தும் நேர்காணல் நடைபெற்றது. இந்த பணிக்கான விண்ணப்பங்களை பெற்று, தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் நோக்கில் இன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. லோகநாதன், வட்டாட்சியர் திரு. பிரசன்ன மூர்த்தி, சத்துணவு துறை மேலாளர் திரு. சங்கர் மற்றும் திருமதி தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தமாக 106 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் 71 மனுக்கள் தேவையான தகுதி ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 35 தகுதி பெற்ற பெண்கள் நேர்காணலில் பங்கேற்றனர். பதவிக்கு தேர்வானவர்கள் விரைவில் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக