நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தடுப்பணை அமைக்கப்படும் இடம் சின்னாறு அணையின் கீழ்பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தடுப்பணை மூலம் 856 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கவுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் சின்னாறு அணையில் நீர்மட்டம் அதிகரித்து, பாதுகாப்பு கருதி 28,500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதுடன், அதன் பின்விளைவாக ஜெல்திம்மனூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பழைய தடுப்பணைகள் பெரிதும் சேதமடைந்தன. இந்நிலையில், சின்னாற்றின் உபரி நீரை கட்டுப்படுத்தி, அதனை ஜெல்திம்மனூர் பகுதியில் தடுப்பணை மூலம் பிடித்து, அமானிமலலாபுரம், ராஜபாளையம், பஞ்சப்பள்ளி, சாமனூர் உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் சென்றடையும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் இன்றியமையாத தீர்வு கிடைக்கிறது.
நீர் வளத்துறையின் நிதியிலிருந்து ரூ.5.50 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொருளாளர் முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், எம்.வீ.டி. கோபால், முனியப்பன், அடிலம் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் முருகன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் ராஜபாட்ரங்கதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.